Apr 02

யாழ். பல்கலை கலைப்பீட கல்விச் செயற்பாடுகள் மீள ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அடக்குமுறைக்கு எதிராகவும், கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையைக் கண்டித்தும் கலைப்பீட மாணவர் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் கைவிடப்பட்டுள்ளது.

வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் எழுத்து மூலம் தமக்கு அறிவித்ததையடுத்து  இன்றுடன் காலை 9.30 மணியுடன் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் சார்பில் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ரஜீவன் தெரிவித்தார். 

மாணவர்களின் நியாயமான போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது எனவும் அவர் கூறினார்.