day, 00 month 0000

வெடுக்குநாறி மலை ஆலய விவகாரம்: சு.ப.வீரபாண்டியன் என்ன சொல்கிறார்?

சிவராத்திரி தின நிகழ்வில் பங்குக்கொள்ள ஈழத் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சு.ப.வீரபாண்டியன் இந்தியாவை சாடியுள்ளார்.

சென்னையில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

“வவுனியா, வெடுக்குநாறிமலை ஆலய விவகாரத்தில் பங்குக்கொள்ள தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் உலக நாடுகள் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இந்துக்களுக்கு இந்திய அரசு ஆதரவாக செயற்படும் என எண்ணினோம்.

ஆனால் உண்மையிலேயே இந்துக்கள் மற்றும் தமிழர்கள் விவகாரத்தில் இரட்டை வேடத்துடன் செயற்படுகிறது. வாக்குகளுக்கு மாத்திரமே இந்துக்கள் மீது மோடி அரசு அக்கறையுடன் செயற்படுகிறது.

மேலும் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒரு பக்கச்சார்புடனே செயற்படுகிறார் ”என தெரிவித்துள்ளார்.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்