day, 00 month 0000

வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்ட இராமேஸ்வர மீனவர்கள்

இந்திய, இராமேஸ்வர மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று கைவிடப்பட்ட நிலையில் மீனவர்கள் மீண்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுப்படட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தநிலையில், இலங்கைச் சிறையில் உள்ள மூன்று இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி தொடர்வேலை நிறுத்தப்போராட்டம்,உண்ணாவிரத போராட்டம் மற்றும் மூன்றுநாள் தொடர்நடை பயணம் என்பவற்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் தலையீட்டையடுத்து போராட்டங்களை கைவிட்ட நிலையில், ஏழு நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் தமது வழைமையான பணிகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர்.

மீனவர்களின் உண்ணாவிரத போராட்ட இடத்திற்கு நேற்று சென்றிருந்த இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், இராமேஸ்வர மீனவர்கள் விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க ஏற்பாடுகள் செய்துதருவதாக வழங்கிய வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு இராமேஸ்வரம் மீனவர்கள் உறுதியளித்திருந்தனர்.

இதனையடுத்து, இன்று இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வழமையான கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் “தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் காலங்காலமாய் தொடர்ந்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கையாண்டும் இப்பிரச்சினைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில், எல்லை தாண்டி கைதாகும் மீனவர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் இலங்கை அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த மாதம் இரு சம்பவங்களில் சிறைபிடிக்கப்பட்ட நான்கு மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகளையும் அரசுடமையாக்கி வருகின்றது.

இதனை கண்டித்தும், இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுக்க வேண்டும். விடுவிக்கப்பட்ட மீனவர்களின் 10 படகுகளை மீட்க அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இதேவேளை விடுவிக்கப்படாமல் உள்ள 151 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியன இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் என்பன முன்னெடுக்கப்பட்டிருந்தது” என மீனவர் சங்க தலைவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்