Jun 17

திடீரென தீப்பிடித்த ஓட்டோ- பயணித்தவர்கள் அதிர்ச்சி!!


"குடும்பத்தாரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரிய புல்லுமலை -வெலிக்காகண்டி குளக்கட்டுக்கு அருகில் நடந்துள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை இறக்கி விட்டு, அடுத்த பக்கமாக திருப்பும் போது திடீரென முச்சக்கர வண்டி தீப்பற்றியுள்ளது. சாரதி உடனடியாக பாய்ந்து வெளியேறியதால் உயிர் தப்பினார் எனத் தெரிவிக்கப்படுகிறது."