Mar 26

சிறைச்சாலை வைத்தியசாலையில் விமல்; உணவு, மருந்து உட்கொள்ள மறுப்பு

வாகன மோசடி விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச  ஆரம்பித்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருகின்ற நிலையில்  சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

 

அவரது உடல் நிலை மோசமடைந்தைத் தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகளால் விமல் வீரவன்ச உடனடியாக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

இன்று காலை அவர் இவ்வாறு மாற்றப்பட்டதாக அறிய முடிகிறது.   ஐந்து நாட்களாக அவர்  உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றார்.

 

 உடல் நிலை மோசம் காரணமாக விமல் வீரவன்ச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும், நேற்றும் அவர் தொடர்ந்து உனவுத் தவிர்ப்பு போராட்டதை முன்னெடுத்திருந்தார்.

 

வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்துகளையும் உட்கொள்ள விமல் வீரவன்ச மறுத்திருந்ததாக சிறைச்சாலை   வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. இந் நிலையில் நேற்று அவருக்கு சேலைன் வழங்க ஏற்பாடுகள்  செய்யப்பட்டிருந்தன.

 

இதனைவிட விமல் வீரவன்சவின் உடல் நிலைமையை பரிசோதித்த வைத்தியர்கள், அவரது இரத்த மாதிரியைப் பெற்று பரிசோதிக்க ஆலோசனை வழங்கியுள்ளனர்.

 

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு வெளியே தனியார் பரிசோதனை கூடத்தில் விமல் வீரவன்சவின் இரத்தமாதிரி பரிசோதிக்கப்பட்டதாக அறிய முடிந்தது.