Apr 25

கிளிநொச்சியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 6 முஸ்லிம் இளைஞர்கள் கைது?

கிளிநொச்சியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி பொதுச்சந்தைப் பகுதியில் வைத்தே  6 முஸ்லிம் இளைஞர்கள் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, இது குறித்து கிளிநொச்சி பொலிஸாரிடம் கைது இடம்பெறவில்லையென தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தீவிர சோதனைகளும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.