Mar 20

தமிழர்கள் நம்பிக்கையை கைவிட்டுவிடக்கூடாது; டொரன்டோ மேயர்

தமிழினம் ஒருபோதும் நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் கைவிடக்கூடாது என கனடாவின் டொரெண்டோ மேர் ஜோன் டொரி தெரிவித்தார்.

கனடா நாட்டின் டொரெண்டோ மாநகர  மேர் முல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்த்தித்தார்.

நேற்று பத்து மணியளவில் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழர்கள் கடுமையாக உழைக்கின்றார்கள். அத்தோடு தமது பிள்ளைகளையும் மிகவும் திறமையானவர்களாகவும் வளர்கின்றார்கள்.

 தமது உழைப்பில் தமது தாயகத்தில் வாழும் உறவுகளான பாதிக்கப்பட்டவர்களுக்கும் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றார்கள். அவர்களின் ஒத்தாசை எப்போதும் உங்களுக்கு இருக்கும் என்பதை நான் அறிவேன்.

நீங்கள் மிகவும் நோகடிக்கப்ப்ட்டுள்ளீர்கள். சொல்லமுடியாத துன்பங்களை அனுபவிகிண்றீர்கள் என்பதனை பலர் சொல்ல கேட்டிருக்கின்றேன் அவற்றை இன்று நேரில் வந்து பார்க்கும்போது உணர்ந்து கொள்கின்றேன்.

எப்போதும் நம்பிக்கையை கைவிடாதீர்கள்.  பாதிப்புக்களிலிருந்து மீண்டெளுந்தவர்கள் நீங்கள்.   என்றும் நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் இழக்கக்கூடாது ,உங்களின் வாழ்வில் வசந்தம் வீசும் .  என்றும் உங்களுக்கு எமது ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும் என்றார்.