Mar 20

அரசியல் குருவை வெறுத்ததேன்; காரணத்தை வெளியிட்டார் ஜனாதிபதி

 கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

தோழர் சண்முகதாஸன் எனது அரசியல் குரு.  எனக்கு 15 வயதிருக்கும் போது பொலநறுவை வாவிக்கருகில் அவரது அரசியல் வகுப்புகளில் கலந்துகொண்டு கற்று வந்தேன்.

பகல் நேரத்தில் நாங்கள் சம்பலும் சோறும் சாப்பிடும் போது தோழர் சண்முகதாஸனும் அவரது மனைவியும் மறைந்து விடுவார்கள்.

நாங்கள் சம்பலும் சோறும் சாப்பிடும் போது உங்களைக் காணவில்லையே என்று நான் கேள்வி கேட்டேன்.

அதற்கு பதிலளித்த அவர் எனக்கு சிறிது சுகவீனம் இதன் காரணமாக விடுதிக்கு  சென்று சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்றார். அன்றோடு அவரது அரசியல் வகுப்புகளுக்கு முழுக்குப் போட்டேன். என்று குறிப்பிட்டார்.