Nov 15

பூமி அழியப்போகிறது?.!

பால்வெளி மண்டலத்தை பொறுத்த வரையில் அண்டத்தில் பல்வேறு அறியப்படாத பொருட்களானது தொடர்ந்து சுற்றிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் உண்டான பருப்பொருள் சூறாவளி ஒன்று பூமியை மோதக்கூடும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சூரிய மண்டலத்தில் உள்ள பருப்பொருள் சூறாவளியானது 500 கி.மீ/நொடி என்ற வேகத்தில் பயணித்து வருவதாகவும்., இந்த சூறாவளியில் எந்த ஒரு சேதமும் ஏற்படாது என்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சூரிய மண்டலத்தில் காணப்படும் கொந்தளிப்பான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த அறியப்படாத பருப்பொருள் சூறாவளியில் விண்வெளியில் உள்ள கண்டறியப்படாத துகள்களை கூட கண்டறிய இயலும் என்று தெரிவித்துள்ளனர். பூமியின் மீது இந்த சூறாவளியானது மோதும் போது எந்த வித தாக்கத்தையும் காணவோ அல்லது உணரவோ இயலாது.

இந்த பருப்பொருள் சூறாவளி குறித்த மோதல் முன்னறிவிப்பை ஐரோப்பிய விண்வெளி செயற்கைகோள் சேகரித்த தகவலின் படியே வானியல் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர். இதன் மூலமாக எந்த வித பேராபத்தும் ஏற்படாது என்றாலும் விண்வெளியில் எது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கும்.

இது குறித்து சரிவர அறியாத சில நபர்களால் பூமி அழியப்போவதாகவும்., பெரிய சூறாவளியானது தாக்கப்போவதாகவும் தெரிவித்து வருகின்றனர். இதனை நம்பி தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கி மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.