Oct 19

வடக்கு கிழக்கில் எழுந்துள்ள நுண் கடன் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபிப்பு

வடக்கு கிழக்கில் எழுந்துள்ள நுண் கடன் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபித்துள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட சிவில் வலய அமைப்பின் பிரதிநிதிகள் நுண்கடன் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்றை இன்று(வெள்ளிக்கிழமை) சிறிதரனிடம் கையளித்தனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திற்கு சென்ற சிவில் வலய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த மனுவை கையளித்துள்ளனர்.

நுண் கடன் பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசி உரிய தீர்வை பெற்றுத் தருமாறு வலியுறுத்தியே இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.