Sep 08

நைக்கின் புதிய விளம்பரம் குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

காலணி உற்பத்தி நிறுவனமான நைக்கின் புதிய விளம்பரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம் வெளியிட்டுள்ளார்.


அமெரிக்க பன்னாட்டு கூட்டுறவு நிறுவனமான நைக் அண்மையில் தமது புதிய விளம்பர பிரசாரத்திற்காக தேசிய கால்பந்து லீக் வீரர் கொலின் கபெர்னிக்கை ஒப்பந்தம் செய்திருந்தது.

கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி அநீதிகளை எதிர்த்து தேசிய கீதத்தின் போது முழங்காலிட்டு கோஷமிட்டதன் மூலம் பல சர்ச்சைகளை எதிர்கொண்ட வீரர் கொலின் கபெர்னிக்.

இந்நிலையில் இந்த வீரரை பயன்படுத்தி நைக் நிறுவனம் தனது புதிய விளம்பரப் படத்தை உருவாக்கியுள்ளமை தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், ‘ கோபம் மற்றும் புறக்கணிப்புக்களால் விளையாட்டு நிறுவனம் அழிவை நெருங்குகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய கால்பந்து லீக் வீரர்களின் இனவெறி மற்றும் சமூக அநீதிக்கு எதிரான எதிர்ப்புக்களையும் ட்ரம்ப் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.

ட்ரம்பின் இந்த டுவிட்டர் பதிவுக்கு நைக் நிறுவன பிரதிநிதிகள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.