Aug 31

இரத்தினபுரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் ஏனைய மாவட்டங்களை காட்டிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகளவான டெங்கு தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த மாவட்டத்தில் இதுவரை 1656 டெங்கு தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தவகையில் நிவித்திகலை பிரதேச செயலகபிரிவில் அதிகூடிய டெங்கு நோயாளர்களாக 232 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் குருவிட்டவில் 159 பேரும், எகலியகொடவில் 161 பேரும் எலபாத்தவில் 159 பேரும், இரத்தினபுரி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 139 பேரும் இரத்தினபுரி நகரத்தில் 124 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுபாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் குருவிட்ட  பிரதேச செயலக பிரிவில் இருவர் டெங்கு தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் இதனால் மக்கள் அனைவரும் டெங்கு பரவாத வகையில் சூழலை வைத்திருக்க வேண்டுமெனவும் அப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.