முச்சக்கரவண்டி சாரதிகளின் குறைந்தபட்ச வயதெல்லை குறித்து ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு
முச்சக்கரவண்டி தொழிற்துறையினரின் குறைந்தபட்ச வயதெல்லையை 35ஆக மட்டுப்படுத்த தேவையில்லை என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அறிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நிதி மற்றும்வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர கருத்து தெரிவித்துள்ள நிலையில் , முச்சக்கரவண்டி தொழிலில் ஈடுபட குறைந்தபட்ச வயதெல்லையை பரிந்துரைக்க தேவையில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை , முச்சக்கரவண்டிகளை கட்டுப்படுத்துவதற்காக ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.