Jul 19

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கு கறுப்புகொடி.. பாஜகவினர் கைது.. பரபரப்பு!

முதல்வர் நாராயணசாமிக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி சட்டசபைக்குள் பாஜக நியமன எம்எல்ஏக்களை அனுமதிக்காததை கண்டித்து முதல்வர் நாராயணசாமி மற்றும் சபாநாயகர் வைத்தியலிங்கம் ஆகியோரின் வீடுகளை முற்றுகையிடப் போவதாக அம்மாநில பாஜகவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று முதல்வர் நாராயணசாமிக்கு பாஜகவினர் கருப்புக் கொடி காட்ட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.