May 31

ஒன்ராறியோவில் மணி நேர ஊதியம் அதிகரிக்கப்படும்: கத்லின் வின்

ஒன்ராறியோவில் குறைந்த பட்ச மணித்தியால ஊதியம் எதிர்வரும் 2019 ஆண்டிலிருந்து 15 டொலர்களாக அதிகரிக்கப்படும் என முதல்வர் கத்லின் வின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்துதெரிவித்துள்ள அவர், “இந்த அதிகரிப்பு பகுதி நேர ஊழியர்களிற்கும் அதிகரிக்கபடும். இது மட்டுமன்றி குறைந்த பட்ச விடுமுறை உரிமமும் தொழிலாளர் மாற்றியமைப்பின் ஒரு பகுதியாக அதிகரிக்கப்படும்.

2018 ஜனவரி மாதம் குறைந்த பட்ச ஊழியம் மணித்தியாலத்திற்கு 14 டொலர்களாக அதிகரிக்கப்பட்டு அடுத்த வருடம் மணித்தியாலத்திற்கு 15 டொலர்களாக அதிகரிக்கப்படும்.

பகுதி நேர ஊழியர்களும் சமமான ஊழியத்தை பெறுவர். குறைந்த பட்ச விடுமுறை உரிமம் ஊதியத்துடன் இரண்டு வாரங்களிலிருந்து மூன்று வாரங்களாக அதிகரிக்கப்படும். நிறுவனமொன்றில் ஐந்து வருடங்கள் பணியாற்றிய பின்னர் மூன்று வார ஊதியத்துடனான விடுமுறை வழங்கப்படும். ஊழியர் ஒருவர் தங்கள் வேலை மாற்றத்தை 48 மணித்தியாலங்களிற்குள் இரத்து செய்தால் மூன்று மணித்தியாலத்திற்கான ஊதியம் வழங்கப்படும்” என கூறினார்.