Jul 11

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் திண்டுக்கல்-திருச்சி அணிகள் மோதல்

இந்த நிலையில் 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்டு 12-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானம், திண்டுக்கல் அடுத்துள்ள நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது.இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

திண்டுக்கல் டிராகன்ஸ்: ஆர்.அஸ்வின் (கேப்டன்), என்.ஜெகதீசன், ஆர்.விவேக், சதுர்வேத், ஹரி நிஷாந்த், அனிருத் சீதாராம், முகமது, ஆர்.ரோகித், ஆதித்யா அருண், அபினவ், சிலம்பரசன், திரிலோக் நாத், யாழ் அருண்மொழி, சுஜேந்திரன், கவுசிக், ராமகிருஷ்ணன், அரவிந்த், நிவேதன் ராதாகிருஷ்ணன், வருண் தோத்தாரி.


திருச்சி வாரியர்ஸ்: பாபா இந்த்ராஜித் (கேப்டன்), பரத் சங்கர், கே.விக்னேஷ், சஞ்சய், சோனு யாதவ், எம்.விஜய் கணபதி சந்திரசேகர், எஸ்.சுரேஷ்குமார், வசந்த் சரவணன், அரவிந்த், லட்சுமி நாராயணன், எல்.விக்னேஷ், சந்திரசேகர், மணிபாரதி, அஸ்வின் கிறிஸ்ட், சரவணகுமார், கோவிந்தராஜன், திலக், வி.ஆகாஷ். 

தொடக்க ஆட்டத்தில் விஜயின் அதிரடி பேட்டிங் மற்றும் அஸ்வினின் சுழல் தாக்குதலுக்கு இடையிலான மோதல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.