Jul 03

அமெரிக்க பொருட்களுக்கான கனடாவின் வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தது

அமெரிக்கா கனடிய பெருட்களுக்கு அதீத வரிகளை விதித்துள்ளதை அடுத்து அமெரிக்க பொருட்களுக்கு கனடா அறிவித்துள்ள பதில் வரிவிதிப்பு நடவடிக்கை நேற்றிலிருந்து நடப்புக்கு வந்துள்ளது.

உருக்கு மற்றும் அலுமினிய பொருட்களை அமெரிக்காவினுள் இறக்குமதி செய்து கொள்வதற்கு, அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் என்றுமில்லாத அளவுக்கு அதிக வரி அறவீட்டினை நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கு பதில் நடவடிக்கையாக கனடாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 12.6 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு வரிவிதிப்பினை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வரி அளவினைப் போலவே, பெரும்பாலும் இருப்பு பொருட்கள் உள்ளிட்ட, அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீத தீர்வையை அறிவித்துள்ளது.

அதேபோல கிச்சாப், பீட்சா போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் சுத்திகரிப்பு பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு 10 சதவீத வரி இன்றிலிருந்து அறவிடப்படவுள்ளது.

முன்னதாக உருக்கு, அலுமினியப் பொருட்களை கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்று தெரிவித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த வர்த்தக பிணக்கின் போது கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவை அவமதிக்கும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.