May 03

அதிரடி அம்சங்களுடன் எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்

எல்ஜி ஏற்கனவே அறிவித்ததை போன்று தனது ஜி7 தின்க் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது.எல்ஜி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் QHD பிளஸ் 19:5:9 ஃபுல் விஷன் எல்சிடி சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே கொண்டு நேரடி சூரிய வெளிச்சத்திலும் ஸ்மார்ட்போனினை எவ்வித சிரமமும் இன்றி இயல்பாக பயன்படுத்த முடியும். 

புதிய ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் முந்தைய எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனினை விட கிட்டத்தட்ட 50% மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6 ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, சூப்பர் வைடு ஆங்கிள் கான்ஃபிகரேஷன்களை கொண்டுள்ளது. இதன் வைடு ஆங்கிள் கேமரா லேன்ட்ஸ்கேப்களை  மிக நேர்த்தியாக படம்பிடிக்கிறது. 

முந்தைய எல்ஜி ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது புதிய ஸ்மார்ட்போனின் கேமராக்கள் செல்ஃபிக்களை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் பிரதிபலிக்கிறது. செல்ஃபிக்களை எடுக்க புதிய ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.