Apr 17

கடன் கேட்க வாட்ஸ்அப் வழங்கும் புதிய வசதி

வாட்ஸ்அப் நிறுவனமானது தமது செயலியில் அவ்வப்போது சிறு சிறு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கான வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவதோடு மட்டுமின்றி இனி பண தேவையை கூறி பணம் வேண்டும் என கேட்க முடியும்.

முன்னதாக வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் கொண்டு பணம் அனுப்பக்கூடிய வசதி மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் பணம் வேண்டுமென காண்டாக்ட்களிடம் கோரிக்கை விடுக்க முடியும். புதிய அம்சம் யுபிஐ ஐடி (UPI ID) அல்லது கியூஆர் கோடு (QR Code) மூலம் மட்டுமே வேலை செய்கிறது.

இதனால் காண்டாக்ட்-ஐ நேரடியாக தேர்வு செய்தால் இந்த அம்சம் வேலை செய்யாது. புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.113 வெர்ஷனில் காணப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் குறைந்தளவு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.