Mar 10

சந்திரயான்-1 விண்கலத்தை கண்டுபிடித்தது நாசா

இந்திய விண்வெளித் துறையில் ஒரு கனவுத்திட்டமான சந்திரயான்-1 2008ஆம் ஆண்டு, அக்டோபர் 22ஆம் திகதி  ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்வெளியில் ஏவப்பட்டது.

அதாவது 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம்; திகதி முதல் சந்திரயான்-1 விண்கலத்துடனான தொடர்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இழந்து விட்டது.

இந்த நிலையில், சந்திரயான்-1 தொலைந்து போகவில்லை, அது இப்போதும் சந்திரனின் மேற்பரப்புக்கு 200 கி.மீ. தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது என நாசாவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இருந்தாலும், அதனால் பூமிக்கு தரவுகளை அனுப்பவோ, பூமியில் இருந்து தரவுகளைப் பெறவோ முடியாது. சந்திரன்-1 இனி விண்வெளி குப்பையாகவே கருதப்படும் என விஞ்ஞனிகள் தெரிவிக்கின்றனர்.