Jan 03

சிறையறைகளில் தொலைபேசி - அரசின் புதிய புரட்சி!

பிரான்சின் சிறையறைகளில் தொலைபேசிகளை அமைக்கும் புதிய திட்டம் ஒன்று பிரான்ஸ் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான கேள்வி அழைப்பாணைகள் விடுக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாகப் பிரான்சின் சிறைகளில் உள்ள, ஐம்பதாயிரம் சிறையறைகளிற்கான தொலைபேசிகளை இணைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.சிறையறைகளிற்குள் கடத்தப்படும், சட்டவிரோதச் செல்பேசிகளுடன் மேலும் பல போதைப்பொருட்களும், மற்றும் ஆபத்தான பொருட்களும் அனுப்பப்படுகின்றன.

இதனைத் தடுக்கும் முகமாகவே சிறையறைக்குள் தொலைபேசி இணைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொலைபேசித் தொடர்புகள் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வழங்கப்பட உள்ளமையால், இந்தத் திட்டம் மிகவும் பாதுகாப்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.