May 03

மன்னார் மறைமாவட்ட ஆயர் வடமாகாண முதலமைச்சர் விசேட சந்திப்பு

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மன்னார் ஆயர் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த விசேட சந்திப்பானது சமயங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையையும் சென்று பார்வையிட்டார்.

இந்தச் சந்திப்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர், ஏனைய பங்குக் குருக்களும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளையின் தலைவர், தொழிலதிபர் றோஜன் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்.