Apr 27

அகதிக் கோரிக்கைகள் துரிதமாகப் பரிசீலிக்கப்படும்: குடிவரவு அமைச்சர்

 அகதிக்கோரிக்கைகளைப் பரிசீலிக்க எடுக்கும் நீண்டகால அவகாசம் தொடர்பான பிரச்சினை 2019 ஆம் ஆண்டளவில்  தீர்க்கப்பட்டுவிடும் எனக் கனேடியக் குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 கனடாவிற்குள் அகதிகளை தனியார் அனுசரணை (privately-sponsored refugees) மூலம் அழைத்துவரும் நிறுவனங்கள் , அகதிக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட எடுக்கும் நீண்ட கால அவகாசம் தொடர்பாகக் கவலை கொண்டுள்ளதாக அண்மையில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

 எனினும் இந்த தாமதம் முன்னைய அரசின் காலத்திலிருந்தே தொடர்வதாகவும், பரிசீலனைக் காலம் 12 மாதங்களுக்குக் குறைவானதாக ஆக்கபடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.