// print_r($new['title']); ?>
day, 00 month 0000

விராட் கோலிக்கு அபராதம் விதிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் விராட் கோலிக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. 

இந்த போட்டியில் சென்னை அணி வீரர் ருதுராஜ் ஆட்டம் இழந்த போதும், சிவம் துபே 27 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை இழந்த போதும் விராட் கோலி கத்திக் கூச்சல் போட்டு அதனை கொண்டாடி தீர்த்தார்.

இதேபோல 4 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்து அவுட்டான விராட் கோலி பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக மேக்ஸ்வெல் களமிறங்கி சிக்ஸர் அடித்தபோதெல்லாம், தன்னையே மறந்து உற்சாகமாகக் கத்திக் கொண்டிருந்தார்.

ஒரு முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருக்கும் விராட் கோலியின் இந்த செயல் அங்கிருந்த பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

அத்துடன் இதுபோன்ற செயல்கள் ஐபிஎல் போட்டியின் விதிமீறல்களுக்கு உட்பட்டது என்பதால், விராட் கோலியின் போட்டி கட்டண ஊதியத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்