day, 00 month 0000

பிரித்தானியாவில் முதன்முறையாக அறிமுகமாகவுள்ள கரப்பந்தாட்ட போட்டி

பிரித்தானிய கரப்பந்தாட்ட வரலாற்றில் முதன்முறையாக அறிமுகமாகவுள்ள  Volleyball Premier League [VPL என்னும் மாபெரும் OverGame கரப்பந்தாட்ட போட்டி ஒன்று Southall - Domers wells leisure centre என்னும் இடத்திலுள்ள இருகோட்டு உள்ளரங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவில் தனித்தனியாக இயங்கிவரும் பெரும்பாலான கழகங்களின் கீழ் விளையாடி வரும் அனுபவமிக்க மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்த மிகவும் பலம்வாய்ந்த வீரர்கள் இப்போட்டியில் பங்கெடுக்கின்றனர்.

இப்போட்டியின் மூலம் வீரர்கள் மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதுடன் புதிய தன்னம்பிக்கை மற்றும் கழகங்களுக்கிடையில் நட்புறவு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போட்டிக்கான முன்னேற்பாடாக VPLஇன் பன்னிரண்டு அணிகளுக்கான 72 வீரர்கள், ஏல முறையில் தெரிவு செய்யப்படும் நிகழ்வானது எதிர்வரும் 22/03/2023 புதன்கிழமையன்று சவுத்ஹரோ என்னும் இடத்தில் பிற்பகல் 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஏல முறை என்பது பணத்தினை கொண்டு வீரர்கள் தெரிவு செய்யப்படாமல், 12 VPL அணிகளுக்கும் தலா 1000 புள்ளிகள் வழங்கப்பட்டு, இப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு அணிகளுக்குமான வீரர்களை அந்தந்த உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளனர்.

இந்த நிகழ்வில், இப்போட்டிக்கென புதிதாக உருவாக்கப்பட்ட 12 பிரிமியர் லீக் அணிகளின் அறிமுகம், அந்தந்த அணிகளுக்கான உரிமையாளர்கள் மற்றும் அணி முகாமையாளர்கள் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் பின்னர் வீரர்கள் ஏலம் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

ஏலமிடும் நிகழ்வு மற்றும் போட்டிகள் ஆகியவற்றைத் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு அனைவரும் உலகின் எப்பாகத்திலிருந்தும் இணையம் மூலமும் கண்டுகளிக்கலாம் என்பதை VPL போட்டியின் எற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்