// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஸ்மார்ட்போன் வாங்க போறிர்களா?;இந்த தவறை செய்துவிடாதீர்கள்

சந்தையில் களமிறக்கப்படும் ஒவ்வொரு நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு அதிகம்.  ஸ்மார்ட்போன்கள் மீதுள்ள மோகத்தால் மக்கள் பலரும் ஒவ்வொரு நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களையும் பயன்படுத்த விரும்புகின்றனர்.  ஆனால் நாம் வாங்ககூடிய அனைத்து ஸ்மார்ட்போன்களுமே நீண்ட காலத்திற்கு சிறந்ததாக அமைந்துவிடுவதில்லை, அதனால் நாம் ஸ்மார்ட்போன்கள் வாங்கும் ஒவ்வொரு தடவையும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இப்போது ஸ்மார்ட்போன்கள் வாங்கும்போது நாம் செய்யக்கூடாத ஐந்து தவறுகள் பற்றி இங்கே காண்போம். 

1) மக்கள் பலருக்கும் ஆண்ட்ராய்டு போன் வாங்கலாமா அல்லது ஐபோன் வாங்கலாமா என்கிற குழப்பம் இருந்து வருகிறது.  இரண்டையும் நினைத்து நீங்கள் எப்போதும் குழப்பமடையாதீர்கள், ஏனெனில் இவை இரண்டும் வெவ்வேறு அடித்தளங்களைக் கொண்டவையாகும்.  ஐபோன் எளிமை மற்றும் தனியுரிமை பற்றியது, அதேசமயம் ஆண்ட்ராய்டு தேர்வு மற்றும் கட்டுப்பாடு பற்றியது. 

2) ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன் அந்த போனில் உங்களது தேவைகள் என்ன என்பதை நீங்கள் சிந்தித்து அதன்படி மொபைலை வாங்குங்கள்.  முதலில் ஸ்மார்ட்போனில் நீங்கள் விரும்பும் அம்சங்களை பட்டியலிடுங்கள்.  உதாரணமாக சமூக வலைத்தளங்கள் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் போட்டோஷூட் அல்லது லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு உயர்தர கேமரா கொண்ட மொபைலை தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் வைத்திருக்கும் மொபைல் உங்கள் மதிப்பை உயர செய்யும் வகையில் இருக்கிறதா என்பது போன்ற பலவிதமான உங்களது தேவைகளை கருத்திற்கொண்டு மொபைலை தேர்வு செய்யுங்கள்.  உங்கள் பட்ஜெட்டை பெரிதும் பாதித்திடாத வகையில் சிறந்த அம்சங்களை கொண்ட மொபைல்களை நீங்கள் தேர்வு செய்வது நல்லது.

3) ஒரு நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் குறித்து என்னதான் பல விஷயங்களை கூறினாலும் அந்த மொபைலை நாம் பயன்படுத்தினால் மட்டும் தான் அதன் தரம் எப்படி என்பதை நம்மால் உணர முடியும்.  சிலர் ஒரு லட்சத்திற்கு மேல் மொபைலை வாங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது தவறானது.  ரூ.20,000க்கு கீழ் உள்ள மொபைலை பயன்படுத்தும்போது கிடைக்கும் மகிழ்ச்சி, சிலருக்கு ரூ.50,000 விலையுள்ள மொபைலை பயன்படுத்தும்போது கிடைப்பதில்லை.  எனவே மொபைலுக்கு விலைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  மொபைலின் விலை முக்கியமில்லை, அதில் என்னென்ன மேம்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளது என்பதை மட்டும் பார்த்து தேர்வு செய்யுங்கள்.

4) பெரிய பிராண்டுகள் ஆண்டு முழுவதும் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தினாலும், அவற்றை வாங்குவதற்கு சரியான நேரம் உள்ளது.  உதாரணமாக, ஆப்பிள் புதிய ஐபோன்களை செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்துகிறது என்றால், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் புதிய ஐபோன் வாங்குவதற்கு இது மோசமான நேரமாகும், ஏனெனில் விரைவில் புதிய மாடல் சந்தையில் வந்துவிடும்.  மேலும் தற்போதுள்ள மாடல்கள் நிறுத்தப்படும் அல்லது தள்ளுபடி விலையில் விற்கப்படும்.  ஆனால் நீங்கள் ஐபோனின் பழைய மாடல்களை விரும்பினால், புதிய ஐபோன் சந்தையில் வெளிவந்தவுடன் ஆப்பிள் தனது தயாரிப்புகளை தள்ளுபடி விலையில் வழங்கும், இந்த சமயத்தை பயன்படுத்தி நீங்கள் மொபைலை வாங்கிவிடலாம்.  ஆண்டு இறுதி மற்றும் பண்டிகை காலங்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் மொபைலை வாங்குவதற்கு சிறந்த நேரங்களாகும்.  எனவே நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்ஃபோனை வாங்கும் போது சரியான நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்,

5) புதிய ஸ்மார்ட்போன் வாங்கும்போது சாஃப்ட்வேர் அப்டேட்டுகளை பற்றி நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.  நீங்கள் மொபைலை 4 முதல் 5 வருடங்கள் வரையிலும் வைத்திருக்க திட்டமிட்டால், பல ஆண்டுகளாக OS-நிலை அப்டேட் மற்றும் மாதாந்திர பாதுகாப்பு இணைப்புகளை வழங்கும் மொபைலை தேர்வு செய்ய்யுங்கள்.  பல ஆண்ட்ராய்டு மொபைல்கள் தங்கள் தயாரிப்புகளில் மோசமான நிலையில் சாஃப்ட்வெர் அப்டேட்டுகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  சாம்சங் நிறுவனது தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு அப்டேட்டுகளுக்கு நான்கு வருட ஆதரவை கொடுக்கிறது.  எனவே ஒரு ஸ்மார்ட்போனை வாங்கும்போது அதன்  சாஃப்ட்வேர் அப்டேட்டுகளை ஆராய்ந்து அதற்கேற்ப மொபைலை தேர்வு செய்யுங்கள்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்