// print_r($new['title']); ?>
day, 00 month 0000

வழக்கை வாபஸ் பெற 1 லட்சம் டொலர்களை கேட்கும் அவுஸ்திரேலிய பெண்

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய அவுஸ்திரேலிய பெண், சம்பவத்தை சமாளிப்பதற்கு 1 லட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தனுஷ்க குணதிலக்க தரப்பு அதற்கு இணங்க மறுத்த காரணத்தினால் உரிய தொகையை 25,000 அவுஸ்திரேலிய டொலர்களாக குறைக்க குறித்த பெண் விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது போன்ற இளம் பெண்கள் ‘டேட்டிங் ஆப்’ மூலம் பிரபல விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும், இந்த வழியில் பணம் சம்பாதிப்பதும் ஆஸ்திரேலியாவில் உள்ள பெண்களின் ஒரு பழக்கமாக இருப்பது தெரியவந்துள்ளது.

தனுஷ்க குணதிலக்கவின் வழக்கும் அவ்வாறானதனால் சட்டத்தின் ஊடாகவே அதனை எதிர்கொள்ள அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், தற்போது தனுஷ்க குணதிலக்க சிறையில் இருப்பதாகவும் அவுஸ்திரேலியாவின் சட்ட விவகாரம் முடிவடைய 10 மாதங்களுக்கு மேலாகும் எனவும் அவுஸ்திரேலிய தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்