day, 00 month 0000

கால்பந்து மைதானத்தில் கலவரம் – இந்தோனேசிய கால்பந்து கழகத்திற்கு 58 லட்சம் அபராதம் விதிப்பு

இந்தோனேசியாவின் மலாங்க் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 174 பேர் உயிரிழந்ததாகவும், 180-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கால்பந்து கழகத்தின் அதிகாரிகள் 2 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது என இந்தோனேசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. மேலும், அந்த கால்பந்து கழகத்திற்கு  இலங்கை ரூபாய் படி 58 லட்சம் இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்