// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பயனாளர்களுக்கு முக்கிய தகவலை வெளியிட்ட டுவிட்டர்

பயனாளர்களின் நீண்ட கால கோரிக்கையான எடிட் பட்டன் வசதியை சோதித்து வருவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது டுவிட்டரில் பதிவிட்ட ஒரு கருத்தில் தவறு இருந்தால் எடிட் செய்ய முடியாது. இந்நிலையில் எடிட் செய்யும் வசதியை விரைவில் கொண்டுவருமாறு பயனாளர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், டுவிட்டர் பயனாளர்களின் நீண்ட கால கோரிக்கையான எடிட் பட்டன் வசதியை சோதித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் கட்டண சந்தாதாரர்களுக்கு எடிட் பட்டன் வசதியை டுவிட்டர் அறிமுகம் செய்யவிருக்கிறது.

இதன்படி ப்ளூ பயனர்கள் இருக்கும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் அமெரிக்காவில் இந்த வசதி விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்