day, 00 month 0000

கூகுள் பிளே ஸ்டோர் பயனர்களிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கூகுள் பிளே ஸ்டோரில்  கிடைக்கக் கூடிய 101 ஆண்ட்ராய்ட் ஆப்களில் ஸ்பின்ஓகே(SpinOK) என்னும் உளவு மென்பொருள் பரவியிருத்தல்  கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலமாக உலகில் பல்வேறு நாடுகளில் வாழும்  பலரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் திருட்டுப் போனதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த 101 ஆப்களில் Noizz, zapya, share, VFly, MVbit, Biugo, Cashzine, Fizzo, Novel, Cash Em, Tick, Watch to Ean, கிரேசி டிராப் கேமிங் ஆகிய 10 ஆப்களை மட்டும் 2 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆப்கள் மூலம் பயனர்களிற்கு தெரியாமலே அவர்களுடைய  தகவல்கள்  திருட்டுப் போவதற்கு வாய்ப்புள்ளதால் இவற்றை உடனே டெலிட் செய்துவிட வேண்டும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் பிளே ஸ்டோரில் இருக்கும் ஆப்களை கண்காணிக்கும் பணியில் பல்வேறு ஆன்டி ஸ்பைவேர் நிறுவனங்கள் தொடர்ந்தும்  செயற்பட்டு வருவதாகவும்  கூறப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்