// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இலத்திரனியல் திரைகளுடனும் நேரத்தை செலவிடும் சிறார்கள்..! உளவியல் நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை

இரண்டு வயதுக்குட்பட்ட சிறார்கள் எந்தவிதமான இலத்திரனியல் திரைகளுடனும் நேரத்தை செலவிடக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாக சிறுவர் மற்றும் இளம்பருவ உளவியல் நிபுணர் வைத்தியர் தர்ஷனி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இரண்டு வயதுக்குட்பட்ட சிறார்கள் இலத்திரனியல் திரைகளில் நேரத்தை செலவிடுவது அவர்களின் அறிவுச்சார் திறன்களின் வளர்ச்சியில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது

இதன் மீதான தாக்கம் அவர்களுக்கு 10 முதல் 12 வயதாகும் போதே தெரியவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, இரண்டு வயது முதல் 5 வயது வரையான சிறார்கள், தமது பெற்றோர்களின் கண்காணிப்பின் கீழ் நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலயம் மாத்திரமே இலத்திரனியல் திரையை பயன்படுத்த முடியும் என சிறுவர் மற்றும் இளம்பருவ உளவியல் நிபுணர் வைத்தியர் தர்ஷனி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பதின்ம வயதுடைய இளைஞர் யுவதிகளின் அதிகரித்த சமூக ஊடகங்களின் பாவனை காரணமாக அவர்களின் ஆளுமை வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மனித மூளையின் பின் பகுதியில் உள்ள உணர்ச்சி மூளை எனப்படுவது. உணர்ச்சிகள் தொடர்பான விடயங்கள் விரைவாக வளரும்.

அவை மனித விருப்பத்தை அடிப்படையாக கொண்டு செயற்படுகின்றன.

இதன்காரணமாக, பதின்ம வயதுடையவர்களின் மூளையில் அறிவுசார் திறன்கள் தொடர்பான பகுதிகள் வளர சிறிது தாமதமாகுவதுடன் அதிகரிகத்த சமூக ஊடகங்களின் பாவனையால் அவர்களின் ஆளுமை வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மற்றும்இ சிறுவர் மற்றும் இளம்பருவ உளவியல் நிபுணர் வைத்தியர் தர்ஷனி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்