day, 00 month 0000

உலகளவில் திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்..!ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பாதிப்பு

உலகளாவிய ரீதியில் இன்று அதிகாலை 3.15 மணி முதல் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியுள்ளது.

இது குறித்து  ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் தங்களின் இன்ஸ்டகிராம் சேவை முடங்கியுள்ளதாக புகாரளித்து வருகின்றனர்.

ஆயினும், இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பயனர்களின் சரியான எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை.

ஆனால்  செயலிழப்பு கண்காணிப்பு இணையதளத்தில் அமெரிக்காவில் 100,000 பயனர்களும், கனடாவில் 24,000 ற்கும்  அதிகமான பயனர்களும், பிரிட்டனில் 56,000 பேர் என ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான பயனர்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ," இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பினை  முடிந்தவரை விரைவாக செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு பணியாற்றி வருவதாகவும், சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்