‘கிங்’ கோலி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் விராட் கோலி கோவத்துக்கு பெயர். ஸ்லெட்ஜிங் மன்னர்கள் என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களையே ஒரு கை பார்ப்போம் என வரிந்துக்கட்டும் வித்தகர். கோலி பேட்டிங்கில் எப்படி அதிரடியாக இருப்பாரோ சண்டை-ன்னு வந்தாலும் அதே ரகம்தான்.
நடப்பு ஐபிஎல் தொடரிலே நீங்கள் பல காட்சிகளை பார்த்திருக்கலாம். லக்னோவுக்கு எதிரான போட்டியில் கம்பீர்- கோலி முறைத்துக்கொண்டதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதேபோல் கேலி கிண்டல்களிலும் கோலியை அடித்துக்கொள்ள முடியாது. பந்துவீச்சாளர்களை இமிடேட் செய்வது. மைதானத்தில் டான்ஸ் ஆடி ரசிகர்களை மகிழ்விப்பது என அட்டகாசம் செய்வார்.
சமீபத்தில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி 171 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணியை 59 ரன்களில் சுருட்டியது கோலியின் படை. இதனால் புள்ளிப்பட்டியலில் ஏற்றம் கண்டது ஆர்.சி.பி.
ஜெய்பூரில் நடந்த இந்தப்போட்டியை காண வந்த கோலி ரசிகர்கள் கொண்டு வந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. சீட்டுக்கட்டில் இருக்கும் ராஜா கார்டில் கோலி இருப்பது போன்று எடிட் செய்து கிங் கோலி என அவரது ரசிகர்கள் உற்சாகப்படுத்திய போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.