// print_r($new['title']); ?>
கட்டுபெத்த ரொபோ தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மத்திய நிலையத்தை மீண்டும் இயங்க வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சுமார் நான்கு வருடங்களாக இந்த மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனை மீண்டும் இயக்க வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் கனக்க ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுக்கு அமைய டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் விருத்தி செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் கைத்தொழில்த் துறைக்கு வலுவூட்டுவது இதன் நோக்கமாகும். டிஜிட்டல் மயமாக்கலை மேலும் பலப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதற்காக தனியார் துறையின் ஆதரவும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக்க ஹேரத் தெரிவித்துள்ளார்.