// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் நாளை; என்ன் செய்யலாம், செய்யக்கூடாது?

வருடந்தோறும் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் தோன்றுவது இயல்பான ஒன்று.  

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் பொழுது  பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால்  சந்திர கிரகணம் தோன்றுகின்றது. 

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும் போது இது நிகழ்கிறது. 

அத்தோடு, பூமியின் நிழல் சந்திரன் மேற்பரப்பில் விழும் போது பெனும்பிரல் என்னும் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது.

முதல் சூரிய கிரகணம் மே 20 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில்,  இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5 ஆம் திகதி (நாளை) நடைபெற உள்ளது.  

அத்துடன், மே 5 ஆம் திகதி இரவு 8.45 மணி முதல் அடுத்த  நாள் காலை 1 மணி வரை நிகழவுள்ளது. 

இந்த கிரகணம் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா அகிய பகுதிகளில் மட்டுமே எனவும் கூறப்பட்டுள்ளது.

வழிமுறைகள்

இந்தியப் பெருங்கடல், வட துருவம் ஆகிய பகுதிகளிலும் தெளிவாக தெரியும். கிரஹணத்தின் போது தியானம் அல்லது தங்களுக்கு பிடித்த கடவுளை பிரார்த்தனை செய்யலாம். வீட்டைச் சுத்தம் செய்து, கோமியம் - மஞ்சள் - வேப்பிலை ஆகியவற்றை கலந்து தெளிப்பது நன்மை பயக்கும்.

குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தவிர மற்றவர்கள் கிரகணத்தின் போது முடிந்தவரை உணவு மற்றும் தண்ணீர் பருகாமல் இருப்பது நல்லது. உணவுப் பொருட்களில் துளசி இலைகளை போடலாம். கிரகணத்திற்குப் பிறகு எப்போதும் குளித்துவிட்டு ஆடைகளை சுத்தம் செய்யுங்கள்.

கிரகணத்தின் போது தூங்குவதையோ குளிப்பதையோ தவிர்க்கவும். கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதையும் கிரகணத்தைப் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். எந்த வகையான சரீர செயல்களிலும் ஈடுபடுவது நல்லதல்ல. 2 மணி நேரத்திற்கு முன்பிருந்தே எந்த வித உணவும் உட்கொள்ளக் கூடாது என ஜோதிடம் மூலம் கூறப்படுகிறது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்