// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தனுஷ்க குணதிலக மீதான வழக்கு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருவதால், நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகள் நீதிமன்ற கட்டணத்தை செலுத்த வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

சிட்னி நீதிமன்றில் இன்று(4) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிரதிவாதியான தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் இந்த வாதத்தை முன்வைத்துள்ளனர்.

வெளிநாட்டுப் பிரஜையான தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் வழக்கு விசாணையில் ஈடுபட்டு சுமார் 6 மாதங்கள் கடந்த விட்டதாகவும் இந்த தாமதங்களினால் பெரும் தொகையை செலவிட நேரிட்டு வருவதாகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்படி, அடுத்த நீதிமன்ற அமர்வில், உரிய நீதிமன்ற கட்டணத்தை நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகளே செலுத்த வேண்டும் என்ற பிரேரணையை முன்வைக்க தயாராகி வருகின்றனர்.

அத்துடன் எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற t 20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்க வந்த தனுஷ்க குணதிலக்க, சிட்னியில் யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்