// print_r($new['title']); ?>
day, 00 month 0000

மத சுதந்திரம் கடுமையான அச்சுறுத்தலில்; அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றச்சாட்டு

இலங்கையில் மத சுதந்திரம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் மத சுதந்திர நிலைமைகள் கரிசனை அளிக்கும் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குற்றம்சாட்டியுள்ளது.

இதேவேளை, முதல் முறையாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிறப்பு கண்காணிப்பு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இலங்கையில் கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் மதச் சுதந்திரத்தின் கடுமையான மீறல்களுக்கான போதுமான ஆதாரங்களை சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு, பிரச்சனைக்குரிய சட்டத்தைப் பயன்படுத்தி இலக்கு வைக்கப்பட்ட கைதுகள், நிலம் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்துதல் போன்ற செயற்பாடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

கடந்த ஆண்டு அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட சிறுபான்மையினரை குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் விசாரணை செய்து, கைதுசெய்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட  300 முஸ்லிம் ஆண்களும் பெண்களும் குற்றஞ்சாட்டப்படாமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் பாதுகாப்பு அமைச்சு தலைமையில் தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளுடன் இணைந்து பௌத்த புராதன சின்னங்களை பழுதுபார்க்கும் மற்றும் நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் பௌத்த மக்களே இல்லாத இடங்களில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகள் இந்து மற்றும் முஸ்லிம் மக்களை சுரண்டும் வகையில் உள்ளதாகவும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு கூறியுள்ளது.

இதன்மூலம் பிராந்தியத்தில் மக்கள் தொகையை மாற்றியமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பான அச்சத்திற்கு வழி வகுத்துள்ளது எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணி, கடந்த ஜனவரி மற்றும் ஒகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்துக் கோயில்கள் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பான பல சம்பவங்களை ஆவணப்படுத்தியது எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு புறம்பாக விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டதையும் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் பௌத்த பிக்குகள் புதிய புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சித்த சம்பவத்தையும் அமெரிக்கா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்