// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கடினமான சூழ்நிலைகளில் கூட இந்தியா புதுமைகளை உருவாக்கும்

நமது நம்பிக்கை முதல் ஆன்மீகம் வரை அனைத்து இடங்களிலும் பன்முகத்தன்மை காணப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையேயான கலாச்சார பரிமாற்றம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக முன்னெடுக்கப்பட்டது. கடந்த 17ஆம் தேதி தொடங்கிய சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா குஜராத் மாநிலம், சோம்நாத் நகரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர  மோடி, சௌராஷ்டிரா-தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா மலரை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது என்றும், வெவ்வேறு மொழிகளை பேசும் மக்கள் வாழும் சிறப்பு வாய்ந்த நாடு என்றும் தெரிவித்தார்.

மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட புதுமைகளை உருவாக்கும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது என்று பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி, செளராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்வுகள், இந்தியாவின் ஒற்றுமைக்கு வழிவகுப்பதோடு ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் என்று கூறினார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்