// print_r($new['title']); ?>
day, 00 month 0000

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த இந்திய தூதுவர்

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையுடனான கடனை மறுசீரமைப்பதில் இந்தியாவின் ஆதரவு உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர்.

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியாவின் உறுதிமொழியை உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார்.

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல இந்திய முதலீடுகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

இந்தச் சந்திப்பு நட்பு ரீதியிலும் சுமுகமான சூழ்நிலையிலும் நடைபெற்றதுடன், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்