// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான அம்சங்களுடன் சாதனங்களை அறிமுகம் செய்வதால் அனைவரையும் கவர்கின்றது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் (Mixed reality headset) மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ஆப்­பிள் நிறு­வ­னம் இந்­தி­யா­வில் தனது விற்பனை நிலையத்தை  நேற்றைய தினம் மும்பையில் திறந்து வைத்துள்ளது.

அதிகளவான மக்கள்  முன்­னி­லை­யில் அந்­நி­று­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி டிம் குக் இதனை நேற்­றுக் காலை திறந்து வைத்­துள்ளதுடன், பின்­னர் அங்­கி­ருந்த பல­ரும் அவ­ரு­டன் செல்ஃபி எடுத்­துள்ளனர்.

இந்­தி­யா­வில் ஆப்­பிள் நிறு­வனம் தடம் பதித்து 25 ஆண்­டு­கள் ஆகியுள்ள நிலையில் அதனை நினை­வு­றுத்­தும் வகை­யில் புதிய விற்­பனை நிலை­யம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இசை­ய­மைப்­பா­ளர் ஏ.ஆர். ரகு­மான், ஐஸ்­வர்யா ரஜி­னி­காந்த், நடிகை மாதுரி தீக்ஷித் உள்­ளிட்ட பல திரை­யு­ல­கப் பிர­மு­கர்­களும் கலந்து கொண்டுள்ளனர்.

புதிய விற்­பனை நிலை­யத்­தில் ஆப்­பிள் ஐஃபோன், ஆப்­பிள் கைக்­க­டி­கா­ரம் போன்­ற­வற்றை வாங்குவதற்கு  பலர் முதல் நாள் இர­வி­லி­ருந்தே வரி­சை­யில் நின்றுள்ளனர்.

அவர்­களில் பலர், மறைந்த ஆப்­பிள் இணை நிறு­வ­னர் ஸ்டீவ் ஜாப் படம் பொறித்த டி-சட்டை அணிந்­தி­ருந்­ததுடன்,   சிலர் ஆப்­பிள் நிறு­வன சின்­னம்­ போல தங்­க­ளது தலை­ மு­டியை திருத்தி இருந்­த­னர்.

ஆப்­பிள் பொருள்­க­ளின் தயா­ரிப்பை சீனா­வி­லி­ருந்து மாற்­று­வதற்­கும் விற்­ப­னை­யைச் சந்­தைப்­ப­டுத்­து­வ­தற்­கும் தென்­கி­ழக்கு ஆசி­யா­ மீது ஆப்­பி­ளின் கவ­னம் திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்