// print_r($new['title']); ?>
day, 00 month 0000

13ஆவதை அமுல்படுத்தினால் 83ஆம் ஆண்டைவிடவும் மோசமான இனக்கலவரம் - வெடிக்கும்

அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்த சட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தினால், இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவகையில் , இனக்கலவரம் வெடிக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில், இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நல்லிணகத்தை 3 கட்டங்களாக ஏற்படுத்துவதற்காக அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார். 

அதில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் உள்ளடங்குகின்றது. 

எனவே இதனைக் கைவிட வேண்டும். அதனையும் மீறி முழுமையாக நடைமுறைப்படுத்த எத்தனித்தால் நாட்டில் என்றுமில்லாத வகையில் பாரிய இனக்கலவரம் வெடிக்கும்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் அனுமதிக்கமாட்டோம். 

தமிழ் மக்கள் சிங்கள மக்களைப் போல் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ்கின்றார்கள்.

எனவே 13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக அவர்களுக்கு நேரடி உரிமைகள் வழங்க வேண்டிய அவசியமில்லை


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்