// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஷார்ட்ஸ்,ரீல்ஸ், டிக்டோக் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

YouTube Shorts. Instagram Reels. TikTok பார்ப்பவர்கள் தொடர்பில் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறுகிய நேரக் காணொளிகளுக்கு பலரும் ஒதுக்கும் நேரம் அதிகரித்துக்கொண்டே போகிறதென குறிப்பிடப்படுகின்றது.

ஆனால் குறுகிய நேரக் காணொளிகளை அதிக நேரம் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறுகிய நேரக் காணொளிகளைத் தொடர்ந்து பார்ப்பதால் குறுகிய கால நினைவுத்திறனும் கவனம் செலுத்தக்கூடிய திறனும் பாதிக்கப்படுகிறது. 

அத்தகைய காணொளிகளிலிருந்து உடனே திருப்தி கிடைப்பதால், அவை பார்வையாளர்களை அதிகம் ஈர்க்கக்கூடிய சக்தி கொண்டவை.

நம் விருப்பத்திற்குத் தகுந்தவாறு மேலும் மேலும் காணொளிகள் வருவதால், மூளையில் மகிழ்ச்சியை உண்டாக்கும் டோப்பமின் அதிகரிக்கின்றது. 

ஒவ்வொரு முறை புதிய காணொளியைக் காணும்போதும் மகிழ்ச்சியடைகிறோம். இன்னொரு காணொளி காணவேண்டும் என்று தோன்றுகிறது.

ஆனால் அவற்றில் அதிக நேரம் செலவிடுவோர் ஒரே விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கலாம். அதனால் கவனம் செலுத்தும் திறன் பாதிக்கப்படுகிறது. பாடசாலை செல்லும் பிள்ளைகளின் படிப்பும் பாதிக்கப்படலாம்.

அதிக நேரம் திறன்பேசி அல்லது தொலைக்காட்சியைப் பயன்படுத்துவது மூளையின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றார் டாக்டர் 

திட்டமிடுதல், ஞாபகம், கருணை ஆகியவற்றுக்குப் பொறுப்பான மூளையின் பகுதிகள் பாதிக்கப்படலாம்.

தொழில்நுட்பமே பலருக்கு ஒரு பெரிய இடையூறு. அது கவனம் செலுத்தக்கூடிய திறனைப் பாதிப்பதால், படிக்கும் தகவல்கள் சரியாகச் சென்றுசேர்வதில்லை. அதனால், அவற்றை நினைவுகூருவதில் சிரமம் ஏற்படுகிறது.

குறுகிய நேரக் காணொளிகளை நீண்ட நேரம் பார்ப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள்

கண் பார்வை பாதிப்பு

தூக்கமின்மை

பதற்றம்

மனச்சோர்வு

உடல் ஆரோக்கியம் பாதிப்பு ஆகியவைகள் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்