// print_r($new['title']); ?>
day, 00 month 0000

மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தலைமையில் மெகா கூட்டணி

மதுரை மாநாடு அகில இந்திய தலைவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் மாநாடாக அமையும் என எடப்பாடி பழனிசாமி பேட்டி.

அதிமுகவின் பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் இளங்கோவன் அண்மையில் கொலை செய்யப்பட்டார், இதை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு சென்று அவரின் படத்தை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,  “கொலை செய்யப்பட்ட இளங்கோவின் குடும்பத்திற்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் இருக்கிறது. அவரது குடும்பத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்ச்சியாக இருந்து வருகிறது, இது நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்”  என தெரிவித்தார்.

மதுரையில் நடக்கக்கூடிய அதிமுக மாநாட்டில் கூட்டணி கட்சிகள் பங்கேற்கமா என்ற கேள்விக்கு, ‘மதுரை மாநாடு அகில இந்திய தலைவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் மாநாடாக அமையும். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும்’ என கூறினார்.

மேலும், ‘அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது இரண்டு மூன்று மாதங்களில் அந்த பணிகள் முடிந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. கர்நாடக தேர்தலுக்கு முன்பு சின்னம் கிடைக்கப்பெற்றால், அதிமுக போட்டிவிடுவது குறித்து முடிவெடுக்கப்படும்’ என தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்