// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு அழைப்பு

தமிழர் தாயகத்தில் செயலுருப்பெறும் இன அழிப்புச் செயற்பாடுகளை நிறுத்தக்கோரி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின்  எற்பாட்டில், தியாகத்தாய் அன்னைபூபதி அவர்களின் நினைவுநாளான 2023.04.19 ஆம் திகதி, புதன்கிழமை, மு.ப.9.00 மணிக்கு, கிளிநொச்சி சேவைச் சந்தை வளாகத்தில் நடைபெறவுள்ள அடையாள எதிர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் இணைந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

1. தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க வலியுறுத்தல்.

2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதியைப் பெற்றுக்கொடுத்தல்.

3. அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வலியுறுத்தல்.

4. சமகாலத்தில் இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் அதனோடு இணைந்த அரச திணைக்களங்களால், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இன, மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்தல்.

5. அட்டைப் பண்ணைகள், இறால் பண்ணைகள் அமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் கடல்வள அபகரிப்பை கைவிடக் கோரல்.

6. சீன நாட்டின் முதலீட்டாளர்களுக்கு கிளிநொச்சியின் காணிகளை தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்தல்.

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, பன்னாட்டு சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையால் மேற்கொள்ளப்படும் இவ் எதிர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்