// print_r($new['title']); ?>
day, 00 month 0000

75 வயதில் இலங்கை ஒரு 'தோல்வியுற்ற நாடு'

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்தது. எனினும்  75 வயதில் இலங்கை ஒரு 'தோல்வியுற்ற நாடு' என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவர் மதன்ஜீத் சிங் விரிவுரையின்போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசிய அறக்கட்டளை மற்றும் சென்னை ஆசிய இதழியல் கல்லூரி என்பன இதனை இணையவழியாக ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வின்போது மேலும் தமது கருத்துக்களை பதிவுசெய்த சந்திரிகா குமாரதுங்க, 75 ஆண்டுகள் என்பது ஒரு தேசம் கணிசமான முன்னேற்றத்தை அடைய எடுக்கும் நீண்ட காலமாகும்.

இந்தநிலையில் காலனித்துவ ஆட்சியாளர்களால் 450 வருடங்கள் அழிக்கப்பட்ட பின்னரும் கூட, சுதந்திரத்தின் போது, இலங்கை சிறந்த சமூக-பொருளாதார குறிகாட்டிகளில் சிலவற்றைக் கொண்டிருந்தது. 

எனினும் இன்று 75 வயதில், இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாக மாறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்ஷர்களை குற்றம் சாட்டிய அதேவேளை, ஊழல் மற்றும் முறையான தேசத்தை கட்டியெழுப்புவதில் இலங்கையின் தோல்வியே தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும் என முன்னாள் ஜனாதிபதி குறித்த நிகழ்வின் பின்னரான செவ்வியில் குறிப்பிட்டதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.

ராஜபக்ஷக்கள் காலத்தில், நீதித்துறை, காவல்துறை மற்றும் பொதுச் சேவை உட்பட ஜனநாயக நிர்வாகத்தின் முக்கிய தூண்களில் பரவலான ஊழல் ஊடுருவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம் இலங்கை, பல்லின மற்றும் சகல மத சமூகங்களை ஒன்றிணைத்து ஒரு ஐக்கிய பன்மைத்துவ அரசை உருவாக்கத் தவறிவிட்டதாக  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினரின் பிரச்சினைக்கான நியாயமான தீர்வு, அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் மற்றும் சிறுபான்மையினருடன் அரசியல் அதிகாரப் பகிர்வு முறையை உறுதிப்படுத்த கடந்த 75 ஆண்டுகளாக தவறிவிட்டோம் என இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

அதேநேரம், 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு 'ஜனநாயகமானது அல்ல' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2000ம் ஆண்டில் புதிய அரசியலமைப்புக்கான தமது சொந்த முன்மொழிவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்