// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இலங்கையையும் இந்தியாவையும் மீண்டும் இணைக்கும் கப்பல் போக்குவரத்து

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான கப்பல் சேவை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகமானது, பிற பகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாகவும், இந்தியாவுக்கு மிக அருகில் நாகை மற்றும் காரைக்கால் பகுதிக்கு 56கடல் மைல் (100 கி.மீ) தொலைவில் உள்ளதாகும்.

முன்னதாக, போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடமாகாணத்தின் வளர்ச்சி பணிக்கு உதவ வேண்டும் என இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 2018இல் 287 கோடி ரூபா நிதியுதவியை அளித்தது.

இந்த நிதியுதவி மூலம் காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக ரீதியிலான பயன்பாட்டுக்கும், சரக்குக் கப்பல்களைக் கையாளவும், பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்ற வகையிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் எஞ்சிய பணிகளை நிறைவு செய்து இந்தியாவுக்கும் இலங்கைக்குமான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்காக, துறைமுக அதிகாரசபை, காங்கேசன்துறையின் உட்டகட்டமைப்பு நிர்மானத்திற்காகவும் அபிவிருத்திற்காகவும் 144 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இதன் நிர்மாணப்பணிகளை கடற்படை முன்னெடுத்து வருவதோடு, அப்பணிகள் விரைவில் நிறைவடைந்தவுடன் காங்கேசன்துறை முனையம் இலங்கை துறைமுக அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

தற்போது, 60 கடற்படை வீரர்கள் கொண்ட குழு இலங்கை துறைமுக அதிகார சபை சிவில் பொறியியலாளர்களுடன் அனைத்து 1000 சதுர மீற்றர் அளவில் பயணிகள் முனையத்தை அமைத்து வருகின்றனர்.

காங்கேசன் துறையிலிருந்து காரைக்காலுக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் சேவையின் முதற்கட்டமாக 120 பயணிகள் வரை பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பயணியும் தலா 100 கிலோ வரையிலான பொருட்களை எடுத்துசெல்லலாம் என்பதோடு கட்டணமாக 40 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காரைக்காலில் இருந்து காங்கேசன் துறைக்கு 5 நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க விண்ணப்பித்திருந்தன.

இதில் ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ. என்ற நிறுவனத்துக்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறிருக்கையில், இந்திய ரயில்வேயானது சமய யாத்திரைக்கான விசேட ரயில் சேவையொன்றையும் ஆரம்பித்துள்ளது.

இந்த ரயில் முதல் நாள் டெல்லியில் இருந்து புறப்பட்டு, பௌத்த மதம் தொடங்கிய இடமான போதகயாவுக்கு இரண்டாம் நாள் பயணிக்கிறது.

புத்த கயா சுற்றுலா என அழைக்கப்படும் போத்கயா சுற்றுப்பயணத்தில் பல யாத்திரீகர்கள் ஈடுபடுகின்றார்கள்.

இவ்வாநான நிலையில் குறித்த ரயிலானது, மூன்றாம் நாளில் பாட்னாவிலிருந்து 72 கிமீ தொலைவில் அமைந்துள்ள நாலந்தாவிற்கு மக்களை அழைத்துச் செல்கிறது.

அங்கு பிரபலமான பகுதியான சூரிய மந்திர் மற்றும் ஹியூன் சாங் நினைவு மண்டபத்திற்கு செல்வதற்கு வாய்;ப்புக் கிட்டுகின்றது.

நான்காவது நாளில் ரயில் புனித நகரமான வாரணாசிக்கு யாத்திரீகர்களை அழைத்துச் செல்கிறது. இது பனாரஸ் மற்றும் காசி என்றும் அழைக்கப்படுகிறது.

புராண வரலாறுகளின் படி, புத்தர் தனது முதல் பிரசங்கத்தை வழங்குவதன் மூலம் தர்மத்தின் சக்கரத்தை இங்கே இயக்கினார்.

அதுமட்டுமன்றி இங்கேயே சிவனை வழிபட்ட ஆதி சங்கரர் மற்றும் சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு பெரிய கோவில்களை கட்டிய அக்பர் உட்பட பல்வேறு கோட்டுபாடுகள் கலாசாரங்களை ஆதரிக்கும் பல பேரரசர்களால் இந்த நகரம் ஆளப்பட்டுள்ளது.

ஐந்தாம் நாள் குறித்த ரயிலானது, நேபாளத்தின் லும்பினிக்குள் நுழையும். லும்பினி சித்தார்த்தன் பிறந்த இடம்.

காத்மாண்டுவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இந்திய எல்லைக்கு மிக அருகில் லும்பினி அமைந்துள்ளது.

குறித்த பகுதி இப்போது புத்த புனித யாத்திரை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு புத்தரின் தொல்பொருள் எச்சங்கள் இன்னும் உள்ளன.

பயணப் பட்டியலில் அடுத்த இடம் குஷிநகராகும். குறித்த ரயில் ஆறாம் நாள் குஷிநகரை அடையும். குறித்த பகுதி அழகான உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புனித யாத்திரை தளமாகும்.

இது கோரக்பூரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புத்தர் இங்கு நிர்வாணம் அடைந்ததால் இந்த இடம் புகழ் பெற்றது.

இவ்வாறாக, யாத்திரைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

இலங்கையிலிருந்து எதிர்காலத்தில் ஆகாய அல்லது கடல் வழியாக பயணிக்கும் ஒருவரால் இத்தகைய யாத்திரைகளில் ஈடுபட்டு இலகுவாக அனைத்து இடங்களையும் காண முடியும்.

இவ்விதமான சூழல் இந்திய இலங்கை இடையேயான பிணைப்பை மேலும் வலுவடையச் செய்கின்றது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்