// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக,காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில், வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. 20 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

இந்த நிலையில் ஆளும் பாஜக, 23 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக உள்ள 6 பேர் பெயர் இடம்பெறவில்லை. முன்னதாக நேற்றுமுன்தினம் 189 பேர்களின் முதல்பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. அதில் இடம் இல்லாத நிலையில் முன்னாள் துணை முதலமைச்சர் லக்ஷ்மண் சாவடி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதேபோல பல இடங்களில் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன. தனக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து இதுவரை ஒரு தலைவரும் விளக்கமளிக்கவில்லை என பாஜக எம்.எல்.ஏ. ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்