// print_r($new['title']); ?>
day, 00 month 0000

தமிழர்களிற்கெதிராக பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்ட போது அலட்டிக்கொள்ளாத சிங்கள சமூகம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது பயங்கரவாத தடை சட்டத்தினை காட்டிலும் மோசமானது எனவும் அதன் மூலம் இனம்,மதம், மொழிகளை கடந்து அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கையில் 1970 களில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடை  சட்டம் தற்காலிக சட்டமென கூறப்பட்ட பொழுதும் ஏறத்தாழ 45 ஆண்டுகளிற்கு மேலாக தொடர்கின்றது.

 அதன் மூலம் பல தமிழ் இளைஞர்களை குற்றசாட்டுகளேதுமின்றி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து 10, 15 வருடங்களிற்கு மேலாக உள்ளே வைக்கப்பட்டு அவர்களின் அடிப்படை உரிமைகளுடன், வாழும் உரிமைகளும் பறிக்கப்பட்டமையை  ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவை உட்பட இலங்கைக்கு உதவி செய்யும் பல நாடுகளும் அதற்கெதிராக குரல் கொடுத்துள்ளன.

இன்று புதிதாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை அறிமுகம் செய்துள்ளனர். அரசியல் யாப்பில் மக்களிற்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை,எழுத்துரிமை மற்றும் கூட்டம் கூடும் உரிமை போன்றவற்றை மறுதலிக்கும் .

அத்தோடு, இந்த சட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கெதிராக செயற்படும் எவரையும் கைது செய்து கொள்ள முடியும் என்பதுடன் நாட்டு மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும்.

  அரசாங்கமானது பௌத்தத்திற்கும், பிக்குமார்களிற்கும் முன்னுரிமையை வழங்கியுள்ளதால் பிக்குகளே ஆட்சியாளர்களை ஆட்டிப்படைக்கும் நிலையும்,அவர்களால் கொண்டு வரப்படும் தவறான சட்டங்களிற்கு அவர்களே பலியாகின்ற சுழலும்  காணப்படுகின்றது.

பயங்கரவாத தடை சட்டம் என்பது தமிழ் மக்களை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டது என்பதுடன் அதன் மூலம் விடுதலை புலிகளின் யுத்த காலத்தில் பால்,வயது என எந்த வேறுபாடுகளுமின்றி பலர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்.

அவற்றை சிங்கள அரசியல்வாதிகளும் , சிங்கள மக்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இனம்,மதம், மொழிகளை கடந்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்ற எவர் மீதும் நடவடிக்கையினை எடுக்க முன்மொழிகின்றது.

பாதுகாப்பு தடை சட்டத்தின் கீழ்  பாதுகாப்பு அமைச்சரவையின் உத்தரவுடனே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரை தொடர்ந்தும் வைத்திருக்கும் காலகட்டத்தினை நீடிக்க முடியும்.

ஆனால் இது அதிக அதிகாரத்தினை ஜனாதிபதிக்கு வழங்குவதுடன், அத்ஹனை பரவலாக்கி மாவட்டத்தின் DIG  க்கும் இவ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே, ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள DIG க்கு மண்டை பழுது ஏற்படின் குறித்த தமிழனை பிடிக்கா விடில், அவரை கைதுசெய்ய முடியும்.

அதுமட்டுமன்றி இன்று இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் அமைக்கப்பட்டலும், தொல்லியல் திணைக்களம் பௌத்த மயமாதல் சட்டத்திற்கு முரணாகவே இடம் பெறுகின்றது. இதற்கெதிராக குரலெழுப்பும் மக்கள் மீதே பொலிசாரும் நடவடிக்கை எடுக்கின்றனர்.

நாட்டில் உள்ள பொலிஸ், கடற்படை போன்ற அமைப்புகளிற்கு ஏற்கனவே மிகையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த சட்டத்தினை கொண்டு வருதல் மேலும் அதிகாரங்களை வழங்குவதாக அமையும்.

நாட்டில் பொருளாதாரம் கட்டியெழுப்பட வேண்டுமாயின் ஜனநாயகம் செழிக்க வேண்டும். அவ்வாறாயின் சர்வாதிகார ஆட்சியினை தூண்டுகின்ற சட்டங்களை அமுல்படுத்த கூடாது.

இதற்கெதிராக அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் மற்றும் அமைப்புகளும் குரலெழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்