// print_r($new['title']); ?>
day, 00 month 0000

முல்லை. நந்திக்கடலில் நடந்த மாபெரும் படகுப் போட்டி!

தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு கண்ணகி மாட்டு வண்டில் சவாரி சங்கத்தினரின் ஏற்பாட்டில் நந்திக்கடலில் சிறப்பாக படகுபோட்டி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த படகு போட்டியில் நன்னீர் மீன்பிடி சங்கங்களை சேர்ந்த குள்ளா படகுகள் பல கலந்து கொண்டுள்ளன.

குறித்த படகுப் போட்டியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சிவமோகன் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.

1 கிலோமீற்றர் தூரம் வரை நந்திக்கடலில் இந்த படகு போட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நந்திக்கடலில் படகு சவாரிபோட்டி இதுவரை நடைபெறாத நிலையில், நீண்டகாலத்தின் பின்னர் இம்முறை நன்னீர் மீன்பிடி படகு உரிமையாளர்களை ஊக்கிவிக்கும் நோக்கிலும், மக்களின் பொழுதுபோக்கிற்காகவும் இந்த போட்டி நடைபெற்றுள்ளது.

இதில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை முத்தையன் கட்டு நன்னீர் மீன்பிடி சங்கம் பெற்றுக்கொண்டுள்ளதுடன், மூன்றாம் இடத்தினை வற்றாப்பளை மீன்பிடி சங்கம் பெற்றுக்கொண்டுள்ளது.

முதலாம் இடத்தினை பெற்ற போட்டியாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா பரிசும், இரண்டாம் இடத்தினை பெற்ற போட்டியாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபா பரிசும், மூன்றாம் இடத்தினை பெற்ற போட்டியாளருக்கு 25 ஆயிரம் ரூபா பரிசும் வழங்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்