// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஜனாதிபதியின் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க முடியாது – மொட்டு கட்சி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலையில் தமது கட்சி இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

உரிய ஆய்வுகளின் பின்னரே முடிவுகள் எடுக்கப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறும், அனைத்து கட்சிகளுக்கும் சுதந்திரமாக அரசியல் செய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்குமாறும் ஜனாதிபதியிடம் முதல் கோரிக்கை முன்வைத்தாகவும், அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்ததாக பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு. அதுவும் தற்போது எட்டப்பட்டுவருகின்றது.

எனவே, இவ்விரு விடயங்களுக்கு அப்பால் சென்று ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளை கண்களை மூடிக்கொண்டு நாம் ஆதரிப்பதில்லை.

ஆழமாக ஆராய்ந்த பின்னர் நாட்டுக்கு சாதகமான விடயங்களுக்கே ஆதரவு வழங்கப்படும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்